செய்திகள்
இடமாற்றம்

புதுச்சேரியில் அதிகாரிகள் இடமாற்றம்

Published On 2020-05-25 12:07 IST   |   Update On 2020-05-25 12:07:00 IST
புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 அதிகாரிகளுக்கு கரண்ட் டியூட்டி சார்ஜ் என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி சிவில் சர்வீஸ் அதிகாரிகள் (பி.சி.எஸ்.) 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14 அதிகாரிகளுக்கு கரண்ட் டியூட்டி சார்ஜ் என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்கால் குடிமைப்பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் ரேவதி காரைக்கால் உள்ளாட்சித்துறை துணை இயக்குனராகவும், மாகி நகராட்சி ஆணையர் அஷிஸ் கோயல் திட்ட செயலாக்க முகமை இணை திட்ட இயக்குனராகவும், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் சச்சிதானந்தம், புதுச்சேரி வடிசாராய ஆலை மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா காமராஜர் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தயாளன் பி.ஆர்.டி.சி. நிர்வாக பொதுமேலாளராகவும், காரைக்கால் உள்ளாட்சி துறை துணை இயக்குனர் பாஸ்கரன் காரைக்கால் பேரிடர் மேலாண்மை துறை துணை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவி உயர்வு வழங்கப்பட்ட 14 அதிகாரிகளுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News