செய்திகள்
கோப்பு படம்

மின்துறை தனியார்மயத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-05-23 16:48 IST   |   Update On 2020-05-23 16:48:00 IST
புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவித்துள்ளது.

இதனை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காந்திவீதி ஈஸ்வரன் கோவில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தர்ராமன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மூத்த தலைவர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய பா.ஜனதா அரசு மின்துறையை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.

புதுவை அரசு மின் துறையை அரசு துறையாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

இதேபோல் பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங் களில் மார்க்சிஸ்டு கட்சியினர் கையில் பதாகைகளை ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News