செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் 6 பேர் அனுமதி

Published On 2020-05-13 14:19 IST   |   Update On 2020-05-13 14:19:00 IST
ஈரோடு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் 4 பெண்கள் உள்பட 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா சிறப்பு (தனிமை) வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த வார்டில் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் 4 பெண்கள் உள்பட 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. இது குறித்து அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஞானகண் பிரேம் நவாஸ் கூறிய தாவது:-

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. அங்கு ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News