செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்ய அனுமதி அளிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோவில் அலுவலகத்தில் அனுமதி கேட்டு வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வந்தது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவில்கள் அடைக்கப்பட்டன.
இதனால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னி மலை முருகன் கோவிலில் திருமணம் செய்வதற்காக பொதுமக்கள் கோவில் அலுவலகத்தில் அனுமதி கேட்டு வருகின்றனர்.
ஆனால் அரசின் மறு உத்தரவு வரும் வரை சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை என கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.