செய்திகள்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி - கோப்புப்படம்

பெண் டாக்டர் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு

Published On 2020-05-07 15:29 IST   |   Update On 2020-05-07 15:29:00 IST
கொரோனா தொற்று காரணமாக பெண் டாக்டர் குடும்பம், அவரது தாய் என 7 பேர் தனிமைப்படுத்தபட்ட நிலையில், அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினர் தனிமைப்படுத்தபட்டனர்.
சென்னிமலை:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் தனது கணவர் மற்றும் சகோதரி குடும்பத்தினர் என மொத்தம் 6 பேருடன் சென்னிமலை யூனியன் ஈங்கூர் சிப்காட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 5 நாட்களுக்கு முன் வந்தார்.

இவர்களில் பெண் டாக்டரின் கணவருடைய சகோதரிக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண் டாக்டர் குடும்பம், அவரது தாய் என 7 பேர் தனிமைப்படுத்தபட்டனர். இது தவிர இவர்கள் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்த 7 குடும்பத்தினர் என மொத்தம் 34 பேர் தற்போது தனிமைப் படுத்தபட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி வரை தனிமைப்படுத்தபட்டு உள்ளனர்.

மேலும் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி முழுவதும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அங்கு யாரும் செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

Similar News