செய்திகள்
டாக்டர்கள்-தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணி சிற்பம் செய்து பாராட்டு தெரிவித்த ஓவியர்
கொரோனா ஒழிப்பு பணியில் இருக்கும் டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு தர்பூசணியில் சிற்பம் செய்து ஓவியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் எஸ்.சதீஸ்குமார். 34 வயதாகும் இவர் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக உள்ளார். கொரோனா தொற்று ஊரடங்கில் வீட்டில் இருக்கும் ஓவியர் சதீஸ் குமார் கொரோனா தொற்றில் இருந்து ஈரோடு மாவட்டம் மீண்டு இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தர்பூசணியில் சிற்பம் வடித்து உள்ளார்.
10 ஆண்டுகளாக ஓவியம் மற்றும் காய்கறி சிற்பங்களை உருவாக்கி வரும் சதீஸ் குமார் இதனை 2 மணி நேரத்தில் செய்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மிகவும் கஷ்டப்பட்டு பணியாற்றினார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அரசின் சிங்க முக இலச்சினையை பொறித்தேன். தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பு நிலை இல்லை என்று தெரிந்தும், அனைத்து இடங்களுக்கும் சென்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். எனவே அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் தூய்மை பணியாளர் உருவம் பொறித்தேன். கொரோனா குறித்த விழிப்புணர்வு பத்திரிகை மற்றும் ஊடகத்துறை மூலம்தான் மக்களை சென்று அடைந்தது. அவர்களை பாராட்டும் வகையில் செய்தியாளர் உருவம் பொறித்து உள்ளேன். ஒரு ஓவியராக எனது பாராட்டை இந்த முறையில் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.