செய்திகள்
பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி- போலீஸ் வலைவீச்சு
நெருக்கமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபி பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. கணவர் மற்றும் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 பேரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
பின்னர் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கடந்த 2017-ம் ஆண்டு அந்த பெண்ணின் 2-வது கணவரும் இறந்துவிட்டார். இதனால் அந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
அப்போது 2-வது கணவரின் நண்பரான பிரபு என்பவர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து உள்ளார். கூலித்தொழிலாளியான அவர், அந்த பெண்ணின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்த பழக்கத்தை பயன்படுத்தி பிரபு அந்த பெண்ணை வற்புறுத்தி உல்லாசம் அனுபவித்தார். இதை அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போன் மூலம் பிரபு படம் பிடித்து உள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி அவரை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்துள்ளார். இதற்கிடையே அந்த பெண், இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறினார்.
இதையறிந்த பிரபு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று செல்போனில் இருந்த வீடியோவை மீண்டும் காட்டியதுடன், ‘நான் அழைக்கும்போதெல்லாம் உல்லாசத்துக்கு வரவேண்டும். இல்லையென்றால் உன்னையும், உன் குழந்தைகளையும் கொன்றுவிடுவேன்’ என கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண், கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை வலைவீசி தேடி வருகின்றனர்.