செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசுக்கு அபராதம் விதிக்கலாமா? அன்பழகன் எம்எல்ஏ கேள்வி

Published On 2020-04-20 17:53 IST   |   Update On 2020-04-20 17:53:00 IST
புதுவை அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதற்காக அரசுக்கு அபராதம் விதிக்கலாமா? என்று அன்பழகன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவி ஏற்றதிலிருந்து தனது பணியை செய்வதற்கு மாறாக, தொடர்ந்து கட்சி பணி மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவான பணியை செய்து வருகிறார். இதனால் புதுவையின் வளர்ச்சி தடைபட்டு, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை திருப்திப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் கேரளா, புதுவை ஆகிய 2 மாநிலங்களும் முதல் 2 இடங்களில் இருப்பதாக கூறி, நாகரீகமற்ற வெற்று அரசியல் செய்து வருகிறார். எனவே தமிழகத்தை குறை கூறாமல் புதுவையின் ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும். பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கவும், மோட்டார் சைக்கிளில் 2 பேர் வரகூடாது என நாராயணசாமி அறிவுத்துள்ளதால் பொதுமக்கள் போலீசாரின் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர். அப்படியானல் புதுவை அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. இதற்காக அரசுக்கு அபராதம் விதிக்கலாமா? அரசே அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணைக்கும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன்படி இதுவரை எந்த பொருளுக்கும் அரசு விலையை நிர்ணயிக்க வில்லை.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Similar News