செய்திகள்
முக கவசம்

கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிய வேண்டும்- சுகாதாரத்துறை இயக்குனர்

Published On 2020-04-20 13:32 IST   |   Update On 2020-04-20 13:32:00 IST
கொரோனாவை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்ற 7 பேரில் 3பேர் குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் மேலும் ஒருவர் சிகிச்சையில் குணமடைந்துள்ளார். அவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் மோகன் குமார் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளதாகவும், 35 பேரின் ரத்த மாதிரி ஆய்வு செய்யப்பட்டதில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிவித்தார்.

வரும் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு உடன் இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க முடியும் என்றும் அதனால் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணியவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Similar News