செய்திகள்
கோப்பு படம்

தேவகோட்டையில் ஊஞ்சல் ஆடிய சிறுவன் பலி

Published On 2020-04-17 12:52 IST   |   Update On 2020-04-17 12:52:00 IST
தேவகோட்டை அருகே ஊஞ்சல் கட்டிய தூண் சாய்ந்து விழுந்த விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் பழமை வாய்ந்த செல்லப்பச்செட்டியார் பிள்ளையார் கோவில் உள்ளது.

கோவில் தென்புறத்தில் கோவில் காவலாளி காளிமுத்தன் வசித்து வருகிறார். நேற்று மாலையில் அவரது மனைவி செல்வி (50) வீட்டில் இருந்த தூணிலும் அருகில் உள்ள வேப்ப மர கிளையிலும் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்தார்.

அப்போது பேரன் யுவன்ராஜ்(6) வெளியில் விளையாடி விட்டு வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்தான். பழமை வாய்ந்த கட்டிட தூண் என்பதால் பாரம் தாங்காமல் ஊஞ்சல் சாய்ந்தது.

படுகாயம் அடைந்த இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவன்ராஜ் இறந்தான். செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Similar News