செய்திகள்
அமைச்சர் ஷாஜகான்

தனிமைப்படுத்தப்பட்ட டாக்டர்களுடன் அமைச்சர் ஷாஜகான் சந்திப்பு

Published On 2020-04-15 19:10 IST   |   Update On 2020-04-15 19:10:00 IST
புதுவையில் தனிமைப்படுத்தப்பட்ட டாக்டர்களுடன் அமைச்சர் ஷாஜகான் சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேட்டரிந்தார்.
புதுச்சேரி:

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு 7 நாட்கள் மருத்துவ பணியும், பின்னர் 14 நாட்கள்  அவர்களை தனிமைப்படுத்தவும் வேண்டும். டாக்டர்களை தனிமைப்படுத்துவதால் அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க முடியும். டாகட்ர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள புதுவை காலாப்பட்டில் உள்ள அசோக் ஓட்டலில் சிறப்பான வசதிகளுடன் கூடிய அறைகளும், வேண்டிய உணவும் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. 

இதற்கான பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், கலெக்டர் அருண் ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு தனிமைபடுத்தி தங்க வைக்கப்பட்டுள்ள டாக்டர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேட்டரிந்தனர். கொரோனா தடுப்பு நோடல் அதிகாரி டாக்டர் ரமேஷ் உடனிருந்தார்.

Similar News