செய்திகள்
கைது

எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா என வதந்தி பரப்பியவர் கைது

Published On 2020-04-15 18:50 IST   |   Update On 2020-04-15 18:50:00 IST
திருமுருகன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா என வதந்தி பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

காரைக்கால் வடக்கு தொகுதி திரவுபதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரின் நண்பர் பாஸ்கர். இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ. திருமுருகனை காணவில்லை. அவரை கண்டுபிடித்து கொடுத்தால் 5 கிலோ அரிசி வழங்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. திருமுருகனை மருத்துவர்கள் தேடி வருகின்றனர் என பதிவிட்டனர். 

இது குறித்து எம்.எல்.ஏ. உதவியாளர் ராஜ்குமார் காரைக்கால் போலீசிலச் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தனர். தலைமறைவான பாஸ்கரை தேடி வருகின்றனர்.

Similar News