செய்திகள்
கோப்புபடம்

புதுவையில் மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

Published On 2020-03-31 08:48 GMT   |   Update On 2020-03-31 08:48 GMT
ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

ஊரடங்கு உத்தரவை மீறி புதுவை ஆட்டுப்பட்டி பகுதியில் மது பாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும், அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள், ரூ.8 ஆயிரத்து 350 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுதாகர் 25, அரவிந்த 22, ரஜினி 18, பெரியார் நகர் பழனி 33, என்பது தெரியவந்தது.

கைது செய்த 4 பேர் மற்றும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை கலால் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். கலால் துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News