செய்திகள்
குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர் நாராயணசாமி
கொரோனா நோய் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் தலா 2000 ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசுகள் பல்வேறு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு நிவாரணங்களை அறிவித்தார்.
இதற்கிடையே, புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், கூலிவேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உத்தரவு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக சட்டசபையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.