செய்திகள்
நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்

புதுவையில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல்

Published On 2020-03-21 18:30 IST   |   Update On 2020-03-21 20:51:00 IST
புதுச்சேரியில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசால் இந்தியாவில் 4 பேர் பலியாகினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் எண்ணிக்கை 298 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Similar News