செய்திகள்
மரணம்

உழவர்கரையில் காவலாளி உடல் அழுகிய நிலையில் மர்ம மரணம்

Published On 2020-03-21 16:03 IST   |   Update On 2020-03-21 16:03:00 IST
உழவர்கரையில் காவலாளி உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

புதுச்சேரி:

முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், கட்டிட காண்டிராக்டரான இவர் மேரிஉழவர்கரை கணபதி நகர் முனீஸ்வரன் கோவில் தெருவில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த அர்ச்சுணன் (54) என்பவர் தங்கி காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.

இந்த நிலையில் அர்ச்சுணன் அவர் தங்கி இருந்த மெட்டல்ஷிட் கொட்டகையில் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அர்ச்சுணன் இறந்தாரா? அல்லது நோய் கொடுமையால் இறந்து போனாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News