செய்திகள்
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ஏற்று பிரிவு-53 வனத்தில் குப்பைகளை அகற்றும் பணி தொடக்கம்
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை ஏற்று பிரிவு-53 வனத்தில் கொட்டிய குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
நீலகிரி மாவட்ட கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவரும், முன்னாள் நீதிபதியுமான ஜோதிமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் கூடலூர் மாக்கமூலாவில் பிரிவு-53 வனத்தில் கட்டப்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்டார்.
அப்போது அதே பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் 1 ஏக்கர் பரப்பளவில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தது. இதைக்கண்ட கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி குப்பைகளை அகற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஏன் இதுவரை அகற்றப்படவில்லை என கேட்டார். குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை என நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதைத்தொடர்ந்து உடனடியாக வனப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் உத்தரவிட்டார். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உள்பட துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கூடலூர் மாக்கமூலா மூங்கில் காடுகள் உள்ள இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் கூறியதாவது:- தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி பிரிவு-53 வனத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் சில நாட்கள் நீடிக்கும். அதன்பின்னர் தீர்ப்பாயத்துக்கு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.