செய்திகள்
பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பெட்டியில் போட்ட காட்சி.

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

Published On 2019-12-03 22:29 IST   |   Update On 2019-12-03 22:29:00 IST
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
அரியலூர்:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று காலை வெளியிட்டார். 

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்ற நிலையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

Similar News