செய்திகள்
கொலை

மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தை பிரமுகர் வெட்டி கொலை

Published On 2019-08-14 13:16 IST   |   Update On 2019-08-14 13:16:00 IST
மதுராந்தகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த சூணாம்பேடு காலனியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் வேலு (வயது 30) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கிளை செயலாளராக உள்ளார்.

நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வேலு பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சூணாம்பேடு ஏரிக்கரையில் வேலு வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சூணாம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேலுவை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்று தெரியவில்லை? அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலுவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்சி பிரமுகருக்கும் தகராறு இருந்து வந்தது. இதைப்போல் வேலு அதேபகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அங்குள்ள தொழிலாளர் சங்கத்திலும் தலைவராக இருந்தார். அங்கு யாரிடமும் விரோதம் உள்ளதா? அவர் கடைசியாக யார்-யாரிடம் பேசினார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Similar News