செய்திகள்

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளராக ஜாபர் அலி நியமனம்

Published On 2018-09-20 15:14 IST   |   Update On 2018-09-20 15:14:00 IST
தமிழகத்திற்கான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர். கே. ஜாபர் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:

மனித சமுதாயத்திற்கு எதிராக உலகளாவில் நடைபெறும் வன்முறைகளை தடுப்பதற்கும், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச அளவில் மனித உரிமைகள் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்பு நாடு முழுவதும் தன்னுடைய கிளைகளை பரப்பி, மனித உரிமைகளுக்கு எதிராக நடைபெறும் ஒடுக்குமுறைகளை தடுத்து வருகிறது.

அதன்படி தமிழகத்திற்கான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர். கே. ஜாபர் அலி நியமிக்கப்படுவதாக அதன் தலைவர் டாக்டர். நீம் சிங் பிரேமி தெரிவித்துள்ளார். டாக்டர். கே. ஜாபர் அலி மனிதவள மேம்பாட்டுத் துறையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளதோடு, மனித உரிமைகள் குறித்த உயர் கல்வியில் பட்டம் பெற்றுள்ளார்.
Tags:    

Similar News