செய்திகள்

நெய்வேலி அருகே இளம்பெண்ணை கேலி செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2018-09-18 11:41 GMT   |   Update On 2018-09-18 11:41 GMT
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே இளம்பெண் கேலி செய்த 2 வாலிபர்களை மந்தாரகுப்பம் போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:

நெய்வேலி அருகே உள்ள மேல்பாசனப்பட்டு கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி அம்சா (வயது 29).

இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று மாலை மந்தாரகுப்பத்தில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். கடையின் அருகே புதுஇளவரசன்பட்டை சேர்ந்த துரை என்ற அன்பரசன் (28) மற்றும் பெரியாக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (27) ஆகிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென அம்சாவை கேலி-கிண்டல் செய்தனர்.

இது குறித்து மந்தாரகுப்பம் போலீசில் அம்சா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் வழக்குப்பதிவு செய்து துரை மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
Tags:    

Similar News