செய்திகள்
போர்வெல் ராடு மார்பில் விழுந்து வட மாநில வாலிபர் பரிதாப பலி
கோவையில் போர்வெல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வட மாநில வாலிபர் மீது போர்வேல் ராடு மார்பில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் செனட் பாகல் (வயது 21). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து அங்குள்ள போர்வெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் காருண்யா நகர் பெருமாள்கோவில் பதியில் உள்ள ஒரு தோட்டத்தில் போர் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக போர்வெல் இரும்பு ராடு கழன்று செனட்பாகல் மார்பில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக செனட் பாகலை மீட்டு ஆலாந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செனட்பாகல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.