செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊர்வலம் - மறியல் 600 பேர் கைது

Published On 2018-08-07 10:04 GMT   |   Update On 2018-08-07 10:04 GMT
புதுவையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்று நடந்தது.

வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி ஊர்வலம், மறியல் போராட்டம் நடந்தது. பழைய பஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, சி.ஐ.டி.யூ. சீனுவாசன், முருகன், ஐ.என்.டி.யூ.சி. குமார், முத்துராமன், தொ.மு.ச. அண்ணா அடைக்கலம், முரளி, விடுதலை சிறுத்தைகள் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர்.

போராட்டத்தில் டிரைவிங் ஸ்கூல், இருசக்கர வாகனம், வாகன உதிரி பாகம், டெம்போ, ஆட்டோ, சுற்றுலா வாகனம் உள்ளிட்ட தொழிலாளர் சங்கத்தினர் நூற்றுக்கணக்கில் பங்கேற்றனர்.

ஊர்வலம் அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. அங்கு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் பஸ் நிலையம் நுழைவு வாயிலின் எதிரில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News