செய்திகள்

பூந்தமல்லி சிறையில் இருந்த கொலை கைதிகள் 3 பேர் வேலூர் ஜெயிலுக்கு மாற்றம்

Published On 2018-07-14 15:21 IST   |   Update On 2018-07-14 15:21:00 IST
அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் 3 பேர் பூந்தமல்லி சிறையில் இருந்து வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர்.
வேலூர்:

அம்பத்தூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், 2014-ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஜாபர் சாதிக் (வயது 31), நசீர் ஜலாஉதின் (33), அசானுல்லா (45) உள்பட சிலர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிறைத்துறை நிர்வாக வசதிக்காக, ஜாபர் சாதிக், நசீர் ஜலாஉதின் மற்றும் அசானுல்லா ஆகிய 3 பேரும் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News