செய்திகள்
ரோடியர் மில் திடலில் மழை நீர் தேங்கி உள்ள காட்சி.

புதுவையில் இடியுடன் பலத்த மழை

Published On 2018-05-02 06:31 GMT   |   Update On 2018-05-02 06:31 GMT
கோடை வெயிலின் தாக்கத்தினிடையே பெய்துள்ள திடீர் மழை புதுவை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி:

கடந்த மார்ச் மாதம் தொடங்கி புதுவையில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சத்தில் உள்ளனர்.

இதனால் நண்பகல் வேலையில் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மலை பிரதேசங்களுக்கு பலர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் இரவிலும் தொடங்கியது. இதனால் தூக்கம் இன்றி இரவில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சத்தத்துடன் இடி இடிக்க தொடங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. திடீர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசியது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

அதிகாலை 4 மணிக்கு பிறகு மழை நின்றது. இருப்பினும் காலையில் குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷன நிலை நிலவுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தினிடையே பெய்துள்ள திடீர் மழை புதுவை மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News