செய்திகள்

பெரியார் முன்னிலையில் மேடைப் பேச்சைத் தொடங்கியவள் நான்: பா.வளர்மதி

Published On 2018-01-16 22:06 IST   |   Update On 2018-01-16 22:06:00 IST
9 வயது சிறுமியாக தந்தை பெரியார் முன்னிலையில் மேடைப்பேச்சை தொடங்கியவள் நான் என்று பெரியார் விருது பெற்ற பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் பாடநூல் கழக தலைவருமான  வளர்மதிக்கு இந்தாண்டிற்கான தந்தை பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில் விருதை முதல்வர் பழனிசாமியிடம் இருந்து பா.வளர்மதி பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய பா.வளர்மதி,  ''பெரியார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் 9 வயது சிறுமியாக மேடைப் பேச்சைத் தொடங்கியவள் நான். இன்று அவர் பெயரால் விருதை பெற்றதை பெருமையாகக் கருதுகிறேன்.

தினந்தோறும் கோயில் செல்லும் வளர்மதிக்கு பெரியார் விருதா என சமூக வலைதளங்களில் என்னைக் கேலி செய்பவர்கள் யார் என எனக்குத் தெரியும் கடவுள் ஒழிப்பு கொள்கை மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? பெண் உரிமை, பெண் விடுதலை உள்ளிட்டவையும் பெரியாரின் கொள்கை தான். பெண் உரிமை கொள்கையை மையப்படுத்தியே ஒரு பெண்ணுக்கு பெரியார் விருது கொடுத்துள்ளார் முதல்வர்'' என்று பேசினார்.

Similar News