செய்திகள்

நெய்வேலி அருகே மாதா கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2018-01-02 18:04 IST   |   Update On 2018-01-02 18:04:00 IST
புத்தாண்டையொட்டி நெய்வேலி அருகே மாதா கோவில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ளது அரசக்குழி. இந்த பகுதியில் மாதா கோவில் உள்ளது.

புத்தாண்டையொட்டி நேற்று காலையில் இந்த மாதா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

நேற்று இரவு கோவில் நிர்வாகிகள் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு வராண்டாவில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அந்த உண்டியலில் ரூ.30 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News