செய்திகள்

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம்: கணவர் போலீசில் புகார்

Published On 2017-03-14 17:19 IST   |   Update On 2017-03-14 17:19:00 IST
ஈரோட்டில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் திடீரென மாயாமானார். இதுகுறித்து அவருடைய கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 29). இவரது மனைவி சுபலட்சுமி ( 23). இவர்களுக்கு திருமணமாகி 2 மாதமே ஆகிறது.

சுபலட்சுமி ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல சம்பவத்தன்றும் இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

ஆனால் மாலையில் வெகு நேரமாகியும் சுபலட்சுமி வீடு திரும்பவில்லை. இது பற்றி ஜான் சாமுவேல் சென்று விசாரித்த போது தனது மனைவி காலையில் வேலைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் சுபலட்சுமியை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியவில்லை.

எனவே இது பற்றி ஜான் சாமுவேல் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் காணாமல் போன தனது மனைவி சுபலட்சுமியை கண்டு பிடித்து கொடுக்கும்படி கூறி உள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன புதுப்பெண் சுபலட்சுமியை தேடி வருகிறார்கள்.

Similar News