செய்திகள்

அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Published On 2017-03-13 13:59 IST   |   Update On 2017-03-13 13:59:00 IST
டி.என்.பாளையம் அருகே அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் பகுதி வேட்டைசாமி கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் வேட்டையன். இவரது தோட்டத்தில் காட்டு பன்றிகள் புகுந்து விடுவதால் அவற்றை விரட்ட நாட்டு துப்பாக்கி வாங்கி வைத்திருந்தாராம்.

ஆனால் இந்த நாட்டு துப்பாக்கியை அவர் அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய ரகசிய தகவல் பங்களாபுதூர் போலீசாருக்கு தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வேட்டையனை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வேட்டையன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News