செய்திகள்
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது முதியவரிடம் பணம் கொள்ளை
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது முதியவரிடம் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் சவரியார் தெருவைச் சேர்ந்தவர் குமார் (62). இவர் இன்று காலை ஆதம்பாக்கம் கருணிகர் தெருவில் உள்ள அரசு வங்கியில் பணம் எடுக்க வந்தார்.
அவர் வரிசையில் நின்ற போது கைப்பையில் வைத்து இருந்த ரூ.19,500யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.