செய்திகள்

கரூர் மாவட்டம் ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் டிச. 16-ந்தேதி நடைபெறுகிறது

Published On 2016-11-18 15:37 IST   |   Update On 2016-11-18 15:37:00 IST
கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
கரூர்:

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.12.2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள கூட்டமன்ற அறையில், கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் ஓய்வூதிய இயக்குநர், சென்னை ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளது.

எனவே, அனைத்து ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை (இரட்டைப் பிரதிகளில்) கரூர் மாவட்ட கலெக்டர் "ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என்று எழுதப்பட்ட உறையில், அஞ்சல் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) 13.12.2016ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் அல்லது 16.12.2016 அன்று மனு கொடுக்குமாறும் கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News