செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே வீட்டுக்குள் புகுந்த சரக்கு வேன்: கணவன்-மனைவி உயிர் தப்பினர்

Published On 2016-11-14 10:36 GMT   |   Update On 2016-11-14 10:36 GMT
பு.புளியம்பட்டி அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் சரக்கு வேன் புகுந்த விபத்தில் கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள பாறைபுதூர் என்ற ஊரை சேர்ந்தவர் பெரியராமன் (வயது 60). இவரது மனைவி மாராத்தாள் (55). நம்பியூர் ரோட்டோரம் இவர்களது வீடு உள்ளது.

நேற்று இரவு வீட்டின் வெளியே கொசுவலை கட்டி கட்டிலில் பெரியராமன் படுத்து தூங்கினார். அவரது மனைவி சமையல் அறை அடுத்துள்ள ரூமில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு 1 மணியளவில் கோபியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேன் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பெரியராமன் வீட்டுக்ககுள் புகுந்தது. இதில் சமையல் அறை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அடுத்த அறையில் படுத்திருந்த மாராத்தாள் உயிர் தப்பினார். இதேபோல் கட்டில் போட்டு வெளியே படுத்து தூங்கிய பெரிய ராமனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சமையல் அறை இடிந்து விழுந்ததில் அதிர்ச்சி அடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட மாராத்தாள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சரக்கு வேன் மோதியதில் வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டி பலியானது. 2 ஆடுகள் படுகாயம் அடைந்தது.

இந்த சம்பவம் குறித்து பு.புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News