செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2016-10-17 17:44 GMT   |   Update On 2016-10-17 17:44 GMT
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு:

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக நீர் குறைந்த அளவே வந்து கொண்டிருந்தது.

ஏற்கனவே தென்மேற்கு மழை பொய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த துயரத்தில் இருந்தனர். இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந் 52 அடியிலேயே இருந்தது.

மேலும் ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அணையில் இருந்து ஆற்றுக்கு மட்டும் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள நீர் மின் அணையில் இருந்து 2 டி.எம்.சி.தண்ணீரை பவானிசாகர் அணைக்கு திறந்து விடும்படி அரசு உத்தரவுவிட்டுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடி 1251 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News