செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கவர்னர் மாளிகையை முற்றுகை முயற்சி: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

Published On 2016-10-14 14:43 IST   |   Update On 2016-10-14 14:44:00 IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக எஸ்.டி. பி.ஐ. கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி கிண்டி ரேஸ் கோர்சில் இருந்து கவர்னர் மாளிகைக்கு மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் தலைமையில் பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் பாதியில் தடுத்து நிறுத்தினர். பின்னர் மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால், பொதுச்செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 100 பேரை கைது செய்தனர்.

Similar News