செய்திகள்

தண்டவாளத்தில் இறந்து கிடந்த முதியவர்: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

Published On 2016-08-01 15:57 IST   |   Update On 2016-08-01 15:57:00 IST
ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் காவேரி ரெயில் நிலையத்துக்கும் இடையே 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்துக்கும் காவேரி ரெயில் நிலையத்துக்கும் இடையே 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை.

இறந்து கிடந்தவர் ஒல்லியான உடல் தோற்றத்துடன் மாநிறத்தில் காணப்பட்டார். வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம் கட்டம் போட்ட முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

இடது பக்க முதுகில் ஒரு கருப்பு மச்சமும், வலது கை முட்டிக்கு மேல் ஒரு கருப்பு மச்சமும் உள்ளது.

இறந்து கிடந்தவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்றும் தெரியவில்லை.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Similar News