செய்திகள்
ஈரோடு புத்தகத்திருவிழா 5-ந் தேதி தொடக்கம்: கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார்
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் புத்தக திருவிழா வரும் 5-ந்தேதி தொடங்கி வரும் 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு:
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்காவில் புத்தக திருவிழா வரும் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி வரும் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெறுகிறது.
இதில் 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தக விழா நடைபெறும்.
வரும் 5-ந்தேதி தொடங்கும் விழாவை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அறிமுக உரையாற்றுகிறார். உலக பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக தமிழ் படைப்பரங்கை திறந்து வைத்து பேசுகிறார். சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் பொன்னுசாமி புத்தக அரங்கை திறந்து வைத்து பேசுகிறார்.
வரும் 6-ந் தேதி ‘‘நிறம் மாறிய பூக்கள்’’ என்ற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் பேசுகிறார். 7-ந் தேதி ‘‘இதிகாசங்கள் வலியுறுத்தும் ஒற்றுமை’’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் பேசுகிறார். 8-ந் தேதி இலங்கை ஜெயராமன் வள்ளுவ வரம் என்ற தலைப்பிலும், 9-ந் தேதி நாகப்பன், 10-ந் தேதி வைத்திய நதான், 11-ந் தேதி நடிகர் பாக்யராஜ், 12-ந் தேதி தந்தி டி.வி. முதன்மை செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.
வரும் 13-ந்தேதி கவிஞர் நந்தலாலா தலைமையில் ‘‘கலையும் இலக்கியமும் மக்களுக்கு விருந்தாகவே.. மருந்தாகவே...’’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
வரும் 14-ந் தேதி மலேசியா சொற்பொழிவாளர் பாண்டித்துரை, 15-ந் தேதி நெல்லை கண்ணன் ஆகியோர் பேச உள்ளனர். வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நிறைவு நாளில் ஐ.எஸ்.ஆர்.ஓ. இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த தகவலை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.