செய்திகள்

மொடக்குறிச்சி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

Published On 2016-08-01 15:11 IST   |   Update On 2016-08-01 15:11:00 IST
மொடக்குறிச்சி அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோட்டை அடுத்த அவல்பூந்துறை பழனி கவுண்டன் வலசு என்ற இடத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 57).

இவர் தனது மொபட்டில் பூந்துறைரோடு சக்தி நகர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர் திடீர் என்று மொபட்டில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் பொன்னுசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது

உடனே அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News