செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் அதிரடி கைது

Published On 2016-07-31 17:07 IST   |   Update On 2016-07-31 17:07:00 IST
பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு காந்தி நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி சூரம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் சரோஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக செந்தில் (47), சத்திய மூர்த்தி (35), வெங்கடேஷ் (34), தங்கவேல் (57), ராஜி (59), சந்திரன் (65) சுரேந்திராஜா (47) ஆகிய 8 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து ரூ. 19 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News