செய்திகள்

பவானி சாகர் அருகே வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை

Published On 2016-07-29 16:30 IST   |   Update On 2016-07-29 16:30:00 IST
பவானி சாகர் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

பவானி சாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி சித்தன் குட்டை என்ற இடத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). விவசாயி. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் அவர் மனம் உடைந்தார்.

இதை தொடர்ந்து ரங்கசாமி தோட்டத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து விட்டார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒருதனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News