செய்திகள்

வேதாரண்யம் அருகே கவுன்சிலரை மிரட்டிய 3 பேர் கைது

Published On 2016-06-02 16:23 IST   |   Update On 2016-06-02 16:23:00 IST
வேதாரண்யம் அருகே கவுன்சிலரை தரக்குறைவாக பேசி, தாக்கி மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வேட்டைகாரணிருப்பு காவல் சரகம் வேட்டைகாரணிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மகன் அருள்தாஸ்(50). வேட்டைகாரணிருப்பு ஊராட்சியில் வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஊர் பகுதியில் நாகை மெயின் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது விழுந்தமாவடியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த விழுந்தமாவடியை சேர்ந்த மாணிக்கம் மகன் அர்சுணன்(34) மாணிக்கம் மகன் ஆனந்தராசு(43) ராமசாமி மகன் சரவணன்(37) ஆகிய மூவரும் அருள்தாஸ் மீது மோதுவது போல் சென்றார்களாம்.

இதை பார்த்த அருள்தாஸ் ஒதுங்கி செல்லக் கூடாதா என்று கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த மூவரும் அருள்தாசை தரக்குறைவாக பேசி காயமில்லாமல் கையால் தாக்கி கவுன்சிலராக இருந்தால் நீ எங்களை என்ன செய்ய முடியும் எனக் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினார்களாம்.

இது குறித்து அருள்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் வேட்டைகாரணிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அர்சுணன், ஆனந்தராசு, சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேதாரண்யம் கோர்டில் ஆஜர் செய்தனர்.

Similar News