செய்திகள்
நாகை அருகே மனைவியை எரித்து கொல்ல முயற்சி: கணவர் கைது
நாகை அருகே குடும்ப தகராறு காரணமா மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கலா (வயது 37). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. சிவதர்ஷினி (7), பரிசா(4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி கலாவின் அண்ணன் சிவலிங்கம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது இறுதிசடங்கிற்காக கலா தனது கணவருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் சிவலிங்கத்தின் தங்கை என்ற முறையில் கலா சடங்கு செய்ய சென்றார். அப்போது அவரது கணவர் பாண்டியன் சடங்கில் கலந்து கொள்ளவேண்டாம் என்று கலாவை தடுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கலா உறவினர்கள் முன் கணவர் பாண்டியனை திட்டியதால் அவமானமடைந்த அவர் கலாவிடம் இனி உன்னுடன் நான் வாழமாட்டேன். என்னுடன் நீ ஊருக்குவரக்கூடாது என கூறி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து கலா புதுச்சேரியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று கலா வீட்டிற்கு வந்துள்ளார். அவரை கண்டு ஆத்திரம் அடைந்த பாண்டியன் அவரை அடித்து, உதைத்து அவர் மீது மண்எண்ணை ஊற்றி எரித்து கொல்ல முயன்றுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிய கலா இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர்.
கணவரே மனைவியை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.