செய்திகள்
மயிலாடுதுறை அருகே திருமண ஆசைக்காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது
மயிலாடுதுறை அருகே திருமண ஆசைக்காட்டி இளம்பெண்ணை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை செம்பதனிருப்பு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் திவ்யா (வயது–21) இவரும், வசிட்டச்சேரி அண்ணாநகரை சேர்ந்த ராமசாமி மகன் வினோத்குமார் (27) என்பவரும் செல்போனில் பேசி அறிமுகமாகி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து தினமும் பேசிவந்த வினோத்குமார் கடந்த 16–ந்தேதி திவ்யா வீட்டுக்கு சென்று அவரை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி கற்பழித்துள்ளார். நேற்றும் அவர் திவ்யா வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி திவ்யா கூறி உள்ளார். இதற்கு வினோத்குமார் மறுப்பு தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த திவ்யா இதுபற்றி மயிலாடுதுறை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.
இந்த சம்பவம் செம்பதனிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.