செய்திகள்

மயிலாடுதுறை அருகே போதை பவுடர் வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2016-05-30 10:45 IST   |   Update On 2016-05-30 10:45:00 IST
மயிலாடுதுறை அருகே போதை பவுடர் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் அங்குள்ள பட்டமங்கலம் வண்ணான் குளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த சாராய வியாபாரி குமாரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 580 கிராம் டயோசிபாம் எனப்படும் போதை பவுடர் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் குமாரை கைது செய்தனர்.

இதே போல் மயிலாடுதுறை அடுத்துள்ள முலப்பாக்கம் பகுதியிலும் இன்ஸ்பெக்டர் சோதனையில் ஈடுபட்டார். அங்குள்ள செருகுடி சாலையில் ஒரு கட்டிடத்தின் ஓரமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தார்.

அவரிடமும் 500 கிராம் டயோசிபாம் போதை பவுடர் இருந்தது. அவரை விசாரித்ததில் முலப்பாக்கத்தை சேர்ந்த சாராய வியாபாரி அழகர் சாமி (43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.

Similar News