செய்திகள்

நாகையில் ரவுடி கொலை: 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Published On 2016-05-29 17:04 IST   |   Update On 2016-05-29 17:04:00 IST
நாகையில் ரவுடி கொலையில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

நாகப்பட்டினம், மே.29–

நாகப்பட்டினம் அண்ணா நகர் அக்கரைகுளத்தை சேர்ந்த ராஜன்மகன் தங்கபாண்டியன் (வயது–36) ஆட்டோ டிரைவரான இவர் மீது நாகை டவுன் போலீசிலில் பல வழக்குகள் உள்ளது. அப்பகுதியில் ரவுடியாக இருந்த தங்க பாண்டியனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 27–ந்தேதி நள்ளிரவு வீட்டுக்கு நடந்து வந்த தங்கபாண்டியனை மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கபாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

அவர்கள் இந்த கொலையில் தொடர்புடைய தனபால் மகன் சிங்காரவேலு (19), சேகர் மகன் வினோத்குமார் (29) நாகேஸ்வரன் மகன் கமல்நாத் (22), கணேசன் மகள் விஜயபாரதி (20), மதியழகன் மகன் சிலம்போலியன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட தங்க பாண்டியனுக்கு பிருந்தா (28) என்ற மனைவியும், திவ்யபாரதி (12), என்ற மகளும், உக்கிரபாண்டி (4) என்ற மகனும் உள்ளனர்.

Similar News