வேதாரண்யம் அருகே பெண் கேட்டு வீட்டை சூறையாடிய 2 பேர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள தெற்குபொய்கை நல்லூரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சீதா (வயது45). இவர்களுக்கு அமுதா (18) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.அர்ஜூனன் வெளியூரில் உள்ளார்.
இந்த நிலையில் தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்த செட்டி மகன் அப்பு (24) என்பவர் சீதாவிடம், அமுதாவை திருமணம் செய்துவைக்கும்படி கட்டாயபடுத்தி வந்தார்.
அவருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்பாத சீதா தனது மகன், மகளை அழைத்து சென்று கத்தரிபுலம் கோவில் குத்தகை என்ற இடத்தில் வசித்து வந்தார்.
இதுபற்றி அறிந்த அப்பு அவரது நண்பன் தினேஷ்குமார் (25) ஆகியோர் நேற்று கத்தரிபுலம் கோவில் குத்தகைக்கு வந்து சீ தாவை சந்தித்து தகராறு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுபற்றி சீதா கரியாப்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அப்பு, தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
இவர்கள் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.