செய்திகள்
குடிபோதையில் வக்கீலிடம் தகராறு செய்த ஏட்டு சஸ்பெண்டு
வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் வக்கீலிடம் தகராறு செய்த ஏட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சாரநாத். இவர் சம்பவத்தன்று போலீஸ் நிலையம் வந்த வக்கீல் அழகுராஜாவிடம் குடிபோதையில் தகராறு செய்தது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து வக்கீல் அழகுராஜா இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் புகார் செய்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்டு, ஏட்டு சாரநாத் குடிபோதையில் தகராறு செய்தது தெரிய வந்ததின் பேரில் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து இன்று நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து வேதாரண்யத்தில் வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.