செய்திகள்
வேலை வாய்ப்பு தகவல்களை அறிய மத்திய அரசின் இணையதளம் அறிமுகம்: கலெக்டர் தகவல்
வேலை வாய்ப்பு தகவல்களை அறிய மத்திய அரசின் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் பழனிச்சாமி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த இளைஞர்கள் தங்களுக்குள்ள வேலைவாய்ப்புகள், தொழில்திறன் பயிற்சிகள், வழிகாட்டுதல் தகவல்கள் போன்ற விபரங்களை தேசிய அளவில் அறிந்து கொள்வதற்கு வசதியாக http://www..ncs.gov.in இணையதளம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளால் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படும் பணிக்காலியிட விபரங்கள் வாரந்தோறும் http:\\www.tnvelaivaaipv.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. போட்டித் தேர்வுகளின் மூலம் பணிவாய்ப்பு பெறவிரும்பும் மாணவர்களுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகளும், நூலக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள் தேசிய மற்றும் மாநில அளவிலான இணைய தள வசதியினை பயன்படுத்தி பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.