செய்திகள்

திருமருகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2016-05-26 16:52 IST   |   Update On 2016-05-26 16:52:00 IST
திருமருகல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருமருகல்:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள ஆலங்குடிச்சேரி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சீத்தா (47).

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு நாகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று மாலை அவர் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை.

இதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சீத்தா திட்டச்சேரி போலீசில் புகார் செய்தார். கைரேகை நிபுணர் பன்னீர் செல்வம் வரவழைக்கப்பட்டார். அவர் கொள்ளையர்களின் ரேகைகளை சேகரித்தார்.

இந்த கொள்ளை குறித்து திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், அம்புரோஸ், தமிழ் அரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News