சினிமா செய்திகள்
ஆம்பெர் ஹெர்ட், ஜானி டெப்

பிரபல நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு- ரூ.116 கோடி இழப்பீடு தர நடிகைக்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-06-02 04:35 GMT   |   Update On 2022-06-02 04:35 GMT
முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் வைத்த குற்றச்சாட்டால் ஜானி டெப் தனது பட வாய்ப்புகளை இழந்தார்.
வாஷிங்டன்:

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப். இவர் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

அமெரிக்க நடிகர் ஜானி டெப், அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது விவாகரத்து பெற்றனர்.

இதன்பின் 2018-ம் ஆண்டு 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் ஆம்பர் ஹேர்ட் ஒரு கட்டுரை எழுதினார். அதில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதியிருந்த அவர், ஜானி டெப்பின் பெயரை குறிப்பிடாமல், தன்னை அவர் துன்புறுத்தியதாக எழுதி இருந்தார். இது ஹாலிவுட் உலகை அதிரவைத்தது. 

இந்த கட்டுரை வெளியானதில் இருந்து ஜானி டெப் பட வாய்ப்புகளை இழந்தார். இந்நிலையில் ஆம்பெர் ஹெர்ட் தன்னை அவதூறு செய்துவிட்டதால கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆம்பர் ஹெர்ட் தனக்கு ரூ.380 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கு சில வருடங்களாக நடந்து வந்த நிலையில், சில மாதங்களாக இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஆம்பெர் ஹெர்ட் கூறியது அனைத்தும் பொய் என ஆதாரங்கள் மூலம் நிரூபனமானது.

இதையடுத்து இந்த வழக்கில் தற்போது ஜானி டெப்புக்கு ஆதர்வாத தீர்ப்பு வந்துள்ளது.

இதில் ஜானி டெப்புக்கு,  ஆம்பர் ஹெர்ட் ரூபாய் 116 கோடி இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து பதிவிட்ட ஜானி டெப், நீதிமன்றம் தான் இழந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்துள்ளது. எனது வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என கூறினார்.
Tags:    

Similar News