செய்திகள்
தீரன் சின்னமலை பிறந்த நாளையும் அரசு கொண்டாடவேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
நினைவு நாளை போல தீரன் சின்னமலை பிறந்த நாளையும் அரசு கொண்டாடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடா நிலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட வீரர் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தீரன்சின்னமலை நினைவு நாளில் அவரது தியாகத்தை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்துள்ளோம்.
தீரன்சின்னமலையின் சுதந்திர போராட்ட தியாகம் நினைவு கூறத்தக்கது. 2005ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.
இதுபோல தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போது தான் தீரன்சின்ன மலைக்கு சிலை அமைக்கப்பட்டது. தீரன் சின்னமலையின் நினைவு நாளை அரசு விழாவாககொண்டாடுவது போல அவரது பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் தி.மு.க. ஆட்சியில்தான் கொங்கு வேளாளர் சமுதாயம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதன்மூலம் கல்வி, வேலை வாய்ப்பிலும் அவர்கள் உயர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கீழ்பவானி தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்பிறகு அவர் வெள்ளபெத்தாம் பாளையத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.மு.சின்னசாமி நினைவிடத்துக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.